Home இலங்கை பொருளாதாரம் 200 இல் இருந்து 370 ரூபாவாக அதிகரித்த டொலரின் பெறுமதி! மேலும் குறைந்தால் ஏற்படும் நன்மை

200 இல் இருந்து 370 ரூபாவாக அதிகரித்த டொலரின் பெறுமதி! மேலும் குறைந்தால் ஏற்படும் நன்மை

0

நெருக்கடியான காலகட்டத்தின் போது டொலரின் பெறுமதி 200 ரூபாவாக காணப்பட்டது. பின்னர் 370 ரூபா வரை அது உயர்ந்தது. எனினும் தற்போது 300 ரூபா டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில் அதனை இன்னும் குறைக்கலாம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய(Ranjith  Siyambalapitiya)தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் விலைவாசி மற்றும் சேவைக் கட்டணங்கள் உள்ளிட்டவை தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சிக்கு இறுதிக் கிரியை செய்யும் பிரபல சட்டத்தரணி : அடுக்கப்படும் ஆதாரங்கள்

குறைவடைந்துள்ள டொலரின் பெறுமதி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் சந்தையில் காணப்படுகின்ற பொருட்களில் 75 வீதமானவை இறக்குமதி பொருட்கள் அல்லது இறக்குமதி மூலப் பொருட்களை கொண்டு செய்யப்படுகின்ற உற்பத்திகளாகும்.

இந்த நிலையில்  நெருக்கடியான நேரத்தின் போது 200 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி
370 ரூபா வரை உயர்ந்தது.

தற்போது 300 ரூபா மட்டத்திற்கு குறைவடைந்துள்ளது.

இதனை இன்னும் குறைக்கலாம். ஆனால் குறைக்கும் போது ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

எனவே அதனை குறைப்பது தற்போது சிக்கலாக இருக்கின்றது.

அதன் காரணமாகவே சந்தையில் இருந்து 1200 மில்லியன் டொலர்களை மத்திய வங்கி மீளப்பெற்றது.

டொலரின் பெறுமதி 300 ரூபாவை விட இன்னும் குறைவடையும். ஆனால் அது ஒரு முறையின் அடிப்படையிலேயே இடம்பெறும்.

அப்போது பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் மேலும் குறைவடையும்.

இது மிகவும் சவாலான ஒரு நிலையாகும். எனவே கவனமாக இதனை கையாள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

ஓய்வூதியம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதியில் திடீர் உயர்வு! இன்று பதிவான மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version