முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் குறித்த தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் அநுர அரசாங்கத்தால் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், “அநுரகுமார திஸாநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலையே பிரதானமாக கையில் எடுத்துள்ளார்.
பிற அரசாங்கத்தை வீழ்த்தும் வியூகம் தெரிந்த அநுர தரப்பு தமது அரசாங்கத்தை அவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்பதை அறிந்து வைத்துள்ளது. எனவே, பிள்ளையான் மீதான நடவடிக்கைகள் தொடரும். அல்லது அவர் கைது செய்யப்படலாம்.
ஏனென்றால் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தற்போதைய அரசாங்கம் தெரிவிக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் கூறியுள்ளதாவது,