Home இலங்கை அரசியல் வெளியான அறிக்கை…! கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த கோரிக்கை

வெளியான அறிக்கை…! கம்மன்பிலவை விசாரணைக்கு உட்படுத்த கோரிக்கை

0

உயிர்த்த ஞாயிறு அறிக்கையை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) மறைத்து வைத்திருந்தமையினால் அவரை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினரும், கண்டி (Kandy) மாவட்ட தலைமை வேட்பாளருமான கே.டி. லால்காந்த (K.T. Lalkanta) தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றையதினம் (21.10.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான புதிய அரசாங்கத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு  

பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் மற்றும் மத அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பில் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை உதய கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் (Colombo) நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), பரிந்துரைத்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குழுவின் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளில் ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version