Home இலங்கை சமூகம் பிள்ளையானின் சூழ்ச்சியால் யாழில் தாயை பிரிந்து தவிக்கும் குழந்தைகள்

பிள்ளையானின் சூழ்ச்சியால் யாழில் தாயை பிரிந்து தவிக்கும் குழந்தைகள்

0

அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயாரான தயாபரராஜ் உதயகலாவை
அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து
வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என உதயகலாவின் மகள் டிலானி தயாபரராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (21) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வமக்கள் கட்சியின் உருவாக்கத்தால் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால்
தனது தாயார் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார்.

எமது தாயார் அரசியல் சூழ்ச்சி காரணமாக சிறையில் இருப்பதால் நாம் நான்கு
சகோதரர்களும் பாட்டியின் பராமரிப்பில் தற்போது பல அசௌகரியங்களை சந்தித்து வருகின்றோம்.

இந்நேரம் சிறையிலிருக்கும் எமது தாயார் குற்றம் செய்யாது சிறையில் இருப்பதால்
பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மன உழைச்சலுக்கும் உள்ளாகி மருத்துவ வசதி கூட
கிடையாத நிலையில் இருக்கின்றார்.

இந்தநிலை, அவரது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

அந்தவகையில், எமது குடும்ப நிலையையும் பிள்ளைகளான எமது நிலையையும் கருத்தில்
கொண்டு தாயாரை மனிதாபிமானமான நடவடிக்கையாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை
எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


https://www.youtube.com/embed/3mVRPTzUyao

NO COMMENTS

Exit mobile version