புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும் ராஜபக்சர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமான உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அயலவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும் ராஜபக்சர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமான உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, மிரிஹான காவல்துறையினரால் இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அயல் வீட்டில் வசிக்கும் நபரொருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நிலையில், சந்தேகநபரான உதயங்க வீரதுங்கவை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.