வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் உடுவில் மகளிர் கல்லூரியில் 61
மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
அத்துடன், குறித்த பாடசாலை தொடர்ந்து வலிகாம வலயத்தில் முதல்நிலை பாடசாலையாக இயங்கி வருகின்றது.
வெட்டுப்புள்ளி
உடுவில் மகளிர் கல்லூரியில் 160 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில்
61 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர்.
அத்துடன் 81மாணவர்கள்
100 புள்ளிகளுக்கு மேலும், 18 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேலும் பெற்று 100 வீத
சித்தியினை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
குறித்த பாடசாலையானது இவ்வாறு சாதனை புரிவதற்கு வழிவகுத்த அதிபர்,
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினரும்
பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
