Home இலங்கை அரசியல் அநுரவிற்கு சாதகமான சவேந்திர சில்வா மற்றும் கருணா உட்பட்டோர் மீதான தடை

அநுரவிற்கு சாதகமான சவேந்திர சில்வா மற்றும் கருணா உட்பட்டோர் மீதான தடை

0

பிரித்தானியாவில், சவேந்திர சில்வா மற்றும் கருணா உட்பட்டோருக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து வரவேற்புக்களும் விமர்சனங்களும் நாடளாவிய மற்றும் சர்வதேச ரீதியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இலங்கையின் இராணுவம் மற்றும் கடற்படை துறைகளில் முக்கிய பதவிகளில் இருந்த குறித்த நால்வருக்கும் பிரித்தானிய அரசாங்கம் பயணத்தடை மற்றும் சொத்து முடக்கத்தை அறிவித்துள்ளது. 

இது புலம்பெயர் தேசங்களில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு விடயமாக இருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் இது தொடர்பிலான தமது நிலைப்பாட்டினை இன்னும் வெளிப்படுத்தவில்லை. 

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பில் இது ஒரு பெரும் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளது. 

இதற்கிடையில், இலங்கையில் ஆளும் கட்சி தரப்பினரை கடந்த கால அரசியல்வாதிகள், தலைவர்கள் விமர்சிப்பது இயல்பு. எனவே மகிந்த வெளியிடும் கண்டனங்கள், அவர் யுத்த குற்றம் சார்ந்த நபர், அதற்கு பொறுப்பானவர் எனவே அவர் அவ்வாறு தான் விமர்சிப்பார் என்று பிரித்தானிய அரசியல் ஆய்வாளர், தி.திபாகரன் தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version