இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் என்ரிவ் பெட்ரிக் வாழ்த்துக்களை தெரிவத்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியின் அரசாங்கம்
அதன் போது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட “ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன்” என்றும் அவர் கூறிள்ளார்.
Congratulations to President-elect @anuradisanayake on his victory. Sri Lanka and the UK share a long-standing friendship – strong people to people links, close economic ties and many shared values.
I look forward to working with the President-elect and his government. 🇱🇰🇬🇧
— Andrew Patrick (@AndrewPtkFCDO) September 22, 2024
இந்த நிலையில், நேற்றையதினம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக களமிறங்கிய அநுர குமார திஸாநாயக்க 5,634,915 – 42.31 4%4 வாக்குகளை இலங்கையின் புதிய நிரறவேற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.