Home முக்கியச் செய்திகள் பிரித்தானியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய சட்டம்

பிரித்தானியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய சட்டம்

0

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரித்தானிய (United Kingdom) நாடாளுமன்றத்தில் நேற்று (20) நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 291 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனா்.

இதற்குப் பிறகு குறித்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலவையால் நிராகரிக்க முடியாது

இந்த நிலையில் அங்கு அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, சட்டமாக்கலை தாமதப்படுத்தவோ மட்டும்தான் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கீழவை நிறைவேற்றிய மசோதாக்களை மேலவையால் நிராகரிக்க முடியாது எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பிரித்தானியாவின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.

அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this 

https://www.youtube.com/embed/xnwq9Qgu524

NO COMMENTS

Exit mobile version