Home உலகம் ரஷ்ய தாக்குதலின் எதிரொலி : உக்ரைன் வெளியுறவு மந்திரி திடீர் பதவி விலகல்

ரஷ்ய தாக்குதலின் எதிரொலி : உக்ரைன் வெளியுறவு மந்திரி திடீர் பதவி விலகல்

0

உக்ரைன் (Ukraine) வெளியுறவு மந்திரியான டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) உட்பட நான்கு முக்கிய மந்திரிகள் திடீரென பதவி விலகியுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ரஷ்யா (Russia) உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற நிலையில் இன்னும் மோதல் முடிவுக்கு வரவில்லை.

அமெரிக்கா (America) உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.

உக்ரைன் முயற்சி

ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய மந்திரிகள் பதவி விலகியுள்ளனர்.

இதனடிப்படையில், ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா (Olha Stefanishyna ), தொழில்துறை மூலோபாய மந்திரி ஒலெக்சாண்ட்ர் கமிஷின் (Oleksandr Kamyshin), நீதித்துறை மந்திரி டெனிஸ் மலியுஸ்கா (Denys Maliuska) மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் (Ruslan Srilets) ஆகிய நான்கு பேர் தங்கள் பதவி விலகியுள்ளனர்.

வெளியுறவு மந்திரி

அத்தோடு, அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த ஜெலன்ஸ்கி, நாாடாளுமன்றத்திற்கான அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் தற்போது இருக்கும் மந்திரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரியான டிமிட்ரோ குலேபா தனது பதவியை இன்று திடீரென பதவி விலகியுள்ளார்.

மேலும், ரஷ்யாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய மந்திரிகள் பதவி விலகியுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version