Home முக்கியச் செய்திகள் தப்பியோடும் படையினர் : உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி

தப்பியோடும் படையினர் : உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி

0

ரஷ்யாவின்(russia) இராணுவ வலிமையால் உக்ரைனிய(ukraine) வீரர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி சோர்ந்து போயுள்ளதாகவும், உக்ரைனிய இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பலர் போருக்கு செல்ல மறுப்பதாகவும் CNN தெரிவித்துள்ளது.

பல உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய இராணுவத்தால் கொல்லப்பட்டதாகவும், மீதமுள்ள பல வீரர்கள் உக்ரைன் இராணுவத்தை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரவுகளுக்கு அடிபணிய மறுப்பு

மேலும், உக்ரைன் இராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேற முயல்வதும், அவர்கள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு அடிபணியாமல் இருப்பதும் கடும் சிக்கலாக மாறியுள்ளதாக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

உக்ரைனிய இராணுவத்தின் ஆறு தளபதிகள் இந்தத் தகவலை வெளியிட்டதாகவும் அவர்களில் நான்கு பேர் தங்கள் அடையாளத்தை பகிரங்கப்படுத்த மறுத்ததாகவும் சிஎன்என் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

புதிதாக இராணுவ சேவையில் சேரும் உக்ரைன் வீரர்கள், ரஷ்யாவின் இராணுவ பலத்தை கண்டு உடனடியாக மனஉளைச்சலுக்கு ஆளாகி, அவர்கள் சேவையை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும், அவர்கள் போருக்கு செல்ல மறுப்பதாகவும் தளபதிகள் கூறியதாக சிஎன்என் செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

19,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் உக்ரைன் இராணுவத்திலிருந்து வெளியேறிய 19,000 பேருக்கு எதிராக அந்நாடு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்தச் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version