Home இலங்கை சமூகம் ஐ.நா ஆணையாளரை சந்தித்து விட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் குடும்பம்

ஐ.நா ஆணையாளரை சந்தித்து விட்டு வீடு திரும்பிய தாய்க்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் குடும்பம்

0

 ஐ.நா ஆணையாளர் வோல்கர்டர்க் இலங்கைக்கு வருகைதந்து திரும்பியதன் பின்னர் பல்வேறு சோகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலிருந்து திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டத்தில் கலந்துக்கொண்ட குழந்தை வேல் அழகம்மா என்ற தாயொருவர் ஐ.நா ஆணையாளரை சந்தித்துவிட்டு திரும்பிய அன்றிரவே (2025.06.25) உயிரிழந்துள்ளார்.

ஐ.நா ஆணையாளரை சந்திக்ககூடியவகையில் அவரது உடல்நிலை ஒத்துழைக்காத நிலையிலும் அவரை சந்தித்து தன்னுடைய காணாமல் போன உறவுகளை பற்றி குறிப்பிட்டு அதற்கான நீதியை பெற்றுக்கொடுப்போம் என்று கூறிவிட்டு அவரை சந்தித்ததாக குறித்த தாயுடன் உடனிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குழந்தை வேல் அழகம்மாவுடன் சேர்ந்து 351 தாய்மார்கள் வடக்கு-கிழக்கில் தங்களுடைய உறவுகளை தேடிய அந்த ஏக்கத்துடன் இந்த மண்ணில் உயிர்நீத்துள்ளனர்.

இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..

NO COMMENTS

Exit mobile version