கற்பிட்டி பிரதேச சபையில் சர்வஜன அதிகாரம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஏ.எம்.இன்பாஸின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்பிட்டி பிரதேச சபையில் தவிசாளர், உபதவிசாளர் பதவிகளுக்கான தெரிவின் போது எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதில்லை என்று திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சி தீர்மானித்திருந்தது.
கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்
எனினும் அக்கட்சியின் சார்பில் தெரிவாகியிருந்த உறுப்பினர் ஏ.எம். இன்பாஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, ஒருதரப்புக்கு ஆதரவளித்திருந்தார்.
இதனையடுத்து அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தற்போது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
