Home இலங்கை குற்றம் இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட பெருமளவான கஞ்சா! மூவர் கைது

இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட பெருமளவான கஞ்சா! மூவர் கைது

0

இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோகிராம் கேரள கஞ்சா
யாழ்.காரைநகர் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் பெயரில்
சந்தேகத்துக்கிடமான படகைக் கடற்படையினர் மறித்து சோதனையிட்டனர்.

சட்ட நடவடிக்கை

இதன்போதே
அந்தப் படகில் இருந்து 250 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்துப் படகில் இருந்த மூவரையும் படகுடன் கடற்படையினர் கைது
செய்துள்ளதுடன் படகையும் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் மூவரும் சட்ட
நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version