Home உலகம் மீண்டும் இஸ்ரேலை நோக்கி சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்

மீண்டும் இஸ்ரேலை நோக்கி சீறிப்பாய்ந்த ஏவுகணைகள்

0

இஸ்ரேல்(israel) மீது  ஏமனின்(yemen) ஹவுத்தி (houthi)கிளர்ச்சிகாரர்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

எனினும் ஏமனில் இருந்து இஸ்ரேலிய எல்லையை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை ” வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக” இஸ்ரேலிய இராணுவம் இன்று சனிக்கிழமை(28) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி படைகள் பொறுப்பேற்றுள்ளன.

இஸ்ரேலின் எச்சரிக்கை

இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் கடற்படை மற்றும் வான்வழி மூலம் ஏமன் முற்றுகையிடப்படும் என்று இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பு செங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில், அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், காசாவுக்கு ஆதரவாக ஹவுத்தி பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version