Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் முழுமைப்படுத்தப்படாத பாலத்தின் பணிகள்!

முல்லைத்தீவில் முழுமைப்படுத்தப்படாத பாலத்தின் பணிகள்!

0

Courtesy: uky(ஊகி)

முல்லைத்தீவில்(Mullaitivu) உள்ள பாலமொன்றின் கட்டுமானப்பணிகள் இதுவரை முழுமைப்படுத்தப்படாத நிலையில் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

நீண்ட நாட்களாக தொடரும் இந்த பாலத்தின் பணிகள் இதுவரையிலும் முழுமைப்படுத்தப்படாது இருப்பதால் மக்களின் அப்பாதை ஊடான போக்குவரத்து பாரிய சிரமங்களுக்கு மத்தியில் நடந்து வருகிறது.

விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் இப்பாதை தொடர்பில் அவர்களிடையே அதிருப்தி நிலை இருப்பதையும் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதுக்குளம் பாதை 

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமையும் ஒட்டுசுட்டான் – புதுக்குளத்திற்கான பாதைகளில் ஒன்றின் பாலமே கட்டுமானப் பணிகள் முடிக்கப்படாது இருந்து வருகின்றது.

அதனூடாக போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பாலத்திற்கு கீழாக உள்ள நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாலத்தின் கட்டுமானத்தை ஒப்பந்தம் செய்து உடன்பட்டவர்களின் பொறுப்பில்லாத இயல்பினால் பொதுமக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பொதுப் போக்குவரத்து பாதைகளின் புனரமைப்புக்களை விரைவுபடுத்தும் போதுதான் அவற்றின் பயன்களை பொதுமக்களால் உச்சளவில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறித்த பாதையை பயன்படுத்துவோர் கூறியுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/uncompleted-bridge-work-at-mullaithivu-1732010155

NO COMMENTS

Exit mobile version