Home சினிமா அன்பு – ஆனந்தி திருமணத்தில் வந்த பெரிய சிக்கல்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

அன்பு – ஆனந்தி திருமணத்தில் வந்த பெரிய சிக்கல்.. சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

0

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி மற்றும் அன்பு ஆகியோறது திருமணத்தை நடத்த அவரது நண்பர்கள் மட்டுமின்றி முதலாளி மகேஷும் அதிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கம்பெனியில் பணியாற்றும் முத்து மற்றும் ஜெயந்தி ஆகியோறது திருமணம் என சொல்லி அதனுடன் சேர்த்து அன்பு ஆனந்தி திருமணத்தையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மறுபுறம் அன்புவின் நிச்சயதார்த்தம் எப்படியாவது நடத்த வேண்டும் என அவரது அம்மா தீவிரமாக இருக்கிறார். அன்பு துளசி கழுத்தில் தான் தாலி கட்ட வேண்டும் என அவர் கூறி வருகிறார்.

அடுத்த வார ப்ரோமோ

ஒரு கட்டத்தில் அன்பு ஆனந்திக்கு தான் திருமணம் என்பது போர்டில் எழுதப்பட்டு இருப்பதை பார்த்து ஆனந்தி அதை பற்றி எல்லோரிடமும் கேட்கிறார். அவருக்கு உண்மை தெரிந்து விட்டால் இந்த திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை, இந்த பிரச்சனை எப்படி சமாளிக்க போகிறார்கள்.

திருமணத்தை எப்படியாவது நடத்தி முடிக்க வேண்டும் என தீவிரமாக இருக்கும் மகேஷ் இதில் ஜெயிப்பாரா? ஆனந்தி வயிற்றில் வளர்வது மகேஷ் குழந்தை தான் என்பது எப்போது தான் தெரிய வரும்? இத்தனை கேள்விகளுக்கான பதில்களை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

NO COMMENTS

Exit mobile version