Home இலங்கை அரசியல் டக்ளசை விட்டு வந்தால் தமிழரசுடன் இணையத் தயார் : சைக்கிள் அணி அறிவிப்பு

டக்ளசை விட்டு வந்தால் தமிழரசுடன் இணையத் தயார் : சைக்கிள் அணி அறிவிப்பு

0

தமிழர் அரசியல் ஒரு குழப்பமான கூட்டுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த அரசியலில் தங்களை தீவிரமாக காட்டிக்கொள்பவர்கள் தமிழ்த்தேசிய அரசியலையும் தாயக நிலத்தையும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது தொடர்பில் ஒரு பேசுபொருள் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடனான தொடர்பை தவிர்த்தால் அவர்கள் ஆட்சியமைப்பதற்கு தாங்கள் பூரண ஆதரவை வழங்குவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தமிழர் அரசியலில் ஒரு சாபக்கேடு எனவும் ஐபிசி தமிழின் சக்கர வியூகத்தில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்க மாட்டோம் என உறுதி வழங்கினால் தமிழரசோடு சேர்ந்து பயணிக்க தயார் எனவும் அதற்கு உடன்படாதமையினாலையே கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சு முறிவடைந்ததாகவும் குறிப்பிட்ட அவர்,

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியுடன் ஒரு கொள்கை ரீதியான புரிதலாலே ஒன்றுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தையிட்டி போராட்டத்திற்கு ஏன் முன்னணி ஏனையவர்களை அனுமதிப்பதில்லை , கடந்த காலங்களில் ஏனைய கட்சிகளை இந்திய அடிமைகள் என விமர்சித்த நீங்கள் இப்போது இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் , தமிழரசு டக்ளஸ் தொடர்பை விமர்சிக்கும் நீங்கள் ஏன் உங்களது பங்காளியான சித்தார்த்தன் டக்ளஸ் உடன் பேச முயன்றதை நிராகரிக்கிறீர்கள் போன்ற கேள்விகளுக்கு விரிவான பதில்களை வழங்கியிருந்தார்.

https://www.youtube.com/embed/J2UHr024KZE

NO COMMENTS

Exit mobile version