யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கள்ளமாக மணல் அகழ்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் மணல் திட்டிய பகுதிகளில் இருந்தே மணல் எடுத்துச் செல்லப்பட்டது.
மணல் கொள்ளை
தற்போது கிராமப் பகுதிகளில் கட்டிட வேலைகள் அதிகரித்திருப்பதால், அனுமதி வழங்கப்படாத இடங்களிலும் மக்கள் குடியிருப்புகளின் நடுவே மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இந்த நிலைமை தொடருமானால், இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்பட்டு, மழைக்காலங்களில் பெரும் நீர்த்தேக்கம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் கூடிய கவணம் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
