Home இலங்கை அரசியல் லசந்தவின் கொலையாளிகளை உடனே வெளிக்கொணருங்கள்! அரசுக்கு சஜித் அழுத்தம்

லசந்தவின் கொலையாளிகளை உடனே வெளிக்கொணருங்கள்! அரசுக்கு சஜித் அழுத்தம்

0

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவைக் (Lasantha Wickrematunge) கொலை செய்தவர்கள் யார் என்பதை அரசு
உடனடியாக வெளிக்கொணர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (6)  உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் எடுக்கும்
நடவடிக்கைகள் குறித்து நான் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி பிரதமரிடம் கேள்வி
எழுப்பியிருந்தேன்.

விசாரணை

இத்தகைய தருணத்தில், இது தொடர்பாக அண்மைக்காலமாக அரசு
எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் அரசு தலையிட்டு வெளிப்படையான
விசாரணையை நடத்தி, லசந்தவின் குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நீதி
நியாத்தை நிலைநாட்டி, கொலையாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version