பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நேற்றைய தினம்(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது எனவும் தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்கள்
இந்தநிலையில், அதுருகிரிய பிரதேசத்தில் கிளப் வசந்த என்ற வர்த்தகர் உள்ளிட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் இவ்வாறு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காவல்துறை உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியல் ஒன்றை வெளியிட்டு அவர்களை படுகொலை செய்யப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாதாள உலகக் குழு
இதனையடுத்து அச்சுறுத்தல்கள் வந்தாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் பணிகளிலிருந்து காவல்துறையினர் இடைவிலகப் போவதில்லை.
குறிப்பாக சமூகத்தில் புழக்கத்தில் உள்ள ஆயுதங்களைகளையும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஆயுதங்கள் காவல்துறையினரின் பொறுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.