Home இலங்கை சமூகம் ஜே.வி.பி.அலுவலகம் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

ஜே.வி.பி.அலுவலகம் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

0

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பி அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக இன்று(11) முற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாரிய ஆர்ப்பாட்டம்

சுமார் அரை மணி நேரம் கல்வி அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலையற்ற பட்டதாரிகள் பின்னர் பேரணியாக சென்று பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்களில் எவரும் அத்துமீறி ஜே;வி.பி..அலுவலகத்திற்குள் நுழைந்துவிடாதவாறு தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொண்டிருந்த கொள்கையினையும், வாக்குறுதிகளையும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் மீறியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 35,000 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாகவும், கொள்கை பிரகடன அறிக்கை மூலம் இந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம் அதனை மீறியுள்ளதாக அவர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version