Home அமெரிக்கா அமெரிக்காவில் எதிர்பாராத பணவீக்கம்! ட்ரம்பிற்கு புதிய சவால்

அமெரிக்காவில் எதிர்பாராத பணவீக்கம்! ட்ரம்பிற்கு புதிய சவால்

0

கடந்த மாதம் அமெரிக்காவில் எதிர்பாராத பணவீக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முட்டை மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 3 சதவீதமாக அதிகரித்துள்ளதோடு இது எதிர்பார்த்த 2.9 சதவீதத்தை விட அதிகம் என கூறப்படுகின்றது.

ட்ரம்பிற்கு புதிய சவால்

அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருக்க முடிவு செய்ததையடுத்து, அமெரிக்க பொருளாதாரம் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகவே இந்த பணவீக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க பொருளியலாளர்கள் கணித்துள்ளனர்.

குறித்த விடயம், தேர்தல் பிரசாரங்களில் பணவீக்கத்தை பிரதான பேசுபொருளாக மாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version