Home இலங்கை அரசியல் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பில் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பில் ஆரம்பம்

0

ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் காலியில் இருந்து மூன்று தொடருந்துகளில் வருகை தந்த மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றுள்ளனர்.

அதிபரின் கொட்டகலை விஜயம்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

ஆயிரக்கணக்கிலான மக்கள்

கட்சின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் ஏற்பாட்டில் நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றி தெரிவிப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலியில் இருந்து கொழும்பு மருதானை வரை தொடருந்தில் பயணித்து அங்கிருந்து மாளிகாவத்தை வரை பேரணியாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை, கொட்டகலையில் இன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில்  இடம்பெற்ற மே தின கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version