எதிர்வரும் 25ஆம் திகதி, தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தும் மூன்று முக்கிய கட்சியினருக்கு இடையில் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் நேற்று (07) இடம்பெற்ற சந்திப்பு குறித்து பேசுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர், தமிழ் மக்கள் வழங்கியுள்ள தமிழ் தேசிய ஆணையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒரு பொதுநிலைப்பாட்டை ஏற்படுத்துவதே இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கம் ஆகும் என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,