நுவரெலியாவிற்கு சுற்றுலாச் சென்ற பல்கலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(15.10.2024) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
உறுகுணை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் பொகவந்தலாவையில் மலைப்பகுதி ஒன்றில் முகாமிட்டிருந்த ஆறு பல்கலை மாணவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பல்கலை மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Source: https://tamilwin.com/article/university-students-hospitalised-1729046925
