Home இலங்கை அரசியல் சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கியுள்ள ரணில் தரப்பு

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கியுள்ள ரணில் தரப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தியுடன் உரையாடலை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுக்கு ஐக்கிய
தேசியக் கட்சியின் செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இன்று (20) கூடிய கட்சியின் செயற்குழு, இந்த ஒப்புதலை வழங்கியதாக கட்சியின் துணைத்
தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். 

வலுப்பெறும் கோரிக்கை 

ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் வகையில், ஐக்கிய தேசிய கட்சியும்,
ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று
வருகிறது. 

இதனையடுத்து, இதற்கான உரையாடலுக்கு ஏற்கனவே சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய
மக்கள் சக்தி, தமது ஒப்புதலை வழங்கியிருந்தது. அத்துடன் அதற்காக குழு ஒன்றையும் அமைத்திருந்தது.

இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவும் இன்று தமது ஒப்புதலை
வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version