Home இலங்கை அரசியல் ரணில் – சஜித் இணைவது தொடர்பாக முஜிபுர் ரஹ்மானின் கருத்து

ரணில் – சஜித் இணைவது தொடர்பாக முஜிபுர் ரஹ்மானின் கருத்து

0

Courtesy: Sivaa Mayuri

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் இணைய வாய்பப்பில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இணையவுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

இது உண்மைக்குப் புறம்பானது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முன்னிலையில் இருப்பதால் அத்தகைய இணக்கம் அவசியமில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

தோற்றத்தில் மாற்றம்

ஜனாதிபதி விக்ரமசிங்க சில நபர்களால், அவரது தோற்றத்தை மாற்றும் அளவிற்கு கூட மாற்றப்பட்டு வருகிறார்.

அவர் அண்மைக் காலமாக வித்தியாசமான ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளார். இது ஆச்சரியமாக இருக்கிறது என்று முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். 

Source: https://tamilwin.com/article/unp-and-sjb-will-not-merge-1725372805

NO COMMENTS

Exit mobile version