Home இலங்கை அரசியல் இரண்டு முக்கிய பதவிகளை ஹரின் – சாகலவுக்கு வழங்கிய ஐ.தே.க

இரண்டு முக்கிய பதவிகளை ஹரின் – சாகலவுக்கு வழங்கிய ஐ.தே.க

0

ஐக்கிய தேசியக் கட்சி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரு புதிய முக்கிய பதவிகளை நியமிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை அரசியல் அணிதிரட்டல் பிரதி செயலாளர் நாயகமாக நியமிக்க கட்சி தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறித்த பதவியின் மூலம் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகல ரத்நாயக்க

ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் கூட்டங்களுக்கும் ஹரின் பெர்னாண்டோ பொறுப்பேற்கிறார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, அரசியல் பிரசார மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலின் அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வகிப்பதே சாகல ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட புதிய பதவியாகும்.

சாகல ரத்நாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராகப் பணியாற்றி வந்தாலும், இதுவரை அந்தப் பதவிக்கு எந்த குறிப்பிட்ட பங்கும் பெயரிடப்படவில்லை.

தேர்தல்கள் இல்லாத காலங்களிலும் கூட அரசியல் நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கும் சாகல ரத்நாயக்க பொறுப்பாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version