எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் தீர்மானமொன்றை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
தீர்மானம்
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற குழு அல்லது பொருத்தமாதொரு பொறிமுறையின் மூலம் பணியாற்றவும் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக்கட்சி இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
