இலங்கையின்(sri lanka) வரலாற்றில் இருந்து வரிசை யுகத்தை இல்லாதொழித்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜயவர்தன(Ruwan Wijayawardena) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாட்டில் உரையாற்றிய ருவான் விஜயவர்தன, மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி எனும் மாபெரும் கட்சி இந்த நாட்டுக்கு சிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாகும். “ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் சவாலில் இருந்து தப்பி ஓடவில்லை. அதற்கு வரலாறு சாட்சி.
இந்த நாட்டை வெள்ளையரிடம் இருந்து விடுவித்தவர் டி.எஸ். சேனாநாயக்க.(DS Senanayake) முதல் நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன(JR Jayawardene) இதில் தொழில்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
வரிசை யுகத்தை முடிவிற்கு கொண்டு வந்த ஜனாதிபதி
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரண்டாவது வரிசை யுகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நீக்கிவிட்டார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.