Home இலங்கை சமூகம் மகாவலி கங்கையில் வரலாறு காணாத பெருக்கெடுப்பு.. ஆரம்பிக்கப்பட்டுள்ள இயந்திர படகு சேவை

மகாவலி கங்கையில் வரலாறு காணாத பெருக்கெடுப்பு.. ஆரம்பிக்கப்பட்டுள்ள இயந்திர படகு சேவை

0

வரலாறு காணாத வகையில், மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக
வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இருந்தது.

இதன் நேரடி விளைவாக, குறிஞ்சாக்கேணி பாலம் (தற்காலிகப் பாலம்) முழுமையாக
உடைந்து, குறிஞ்சாக்கேனிக்கும்
கிண்ணியாவுக்குமான தரைவழித் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மக்களின் போக்குவரத்துக்காக புதிய இயந்திர படகு சேவை ஒன்று நேற்று (5) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

படகு சேவை

தேசிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதி இணைப்பாளர் எம். ஈ. எம். ராபிக்,
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச்
செயலாளர் அஷ்ரப் இம்ரான் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தரிவித்த தேசிய மக்கள் சக்தியின் மூதூர்
தொகுதி இணைப்பாளர் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சேவையை பாராட்டி இதனால் பயணிக்கும் பொதுமக்களும் பல்வேறு தங்களுடைய
கருத்துக்களையும் மகிழ்ச்சிகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

NO COMMENTS

Exit mobile version