Home இலங்கை அரசியல் வடக்கில் அர்ச்சுனாவை கண்டு பதறும் அரச அதிகாரிகள்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி

வடக்கில் அர்ச்சுனாவை கண்டு பதறும் அரச அதிகாரிகள்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேவைக்கு அதிகமாக யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) நிதியை அனுப்புவதாக விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்திற்கான விவசாய தேவைகளுக்காக கடந்த அரசாங்கங்களில் 150 மில்லியன் ரூபாய் அனுப்பப்படுவது வழக்கம் என தெரிவித்த அவர் இருப்பினும், இந்த வருடம் இதில் சுமார் நான்கு மடங்கு அதிகமான தொகை வடக்குக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த தொகையில் தேவையான பணிகளை செய்து முடிக்காமல் பெருமளவிலான தொகை மத்திய அரசாங்கத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை (Ramanathan Archchuna) நினைத்து அரச அதிகாரிகள் பயப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, வடக்கிற்கு அனுப்படும் நிதி பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்டுவது குறித்து அரச அதிகாரிகளிடம் அர்ச்சுனா கேள்வி எழுப்பி விடுவாரோ என்பதே அவர்களின் அச்சமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தரப்பில் காலம் காலமாய் அரசியல் செய்து வரும் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் ஒரு தனி மனிதனை பார்த்து அரச அதிகாரிகள் பயப்பிடுவது அங்கு இருக்கும் மற்ற தமிழ் தலைமைகள் மீது பாரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

இவ்வாறு, இங்கு தமிழ் தலைமைகள் முடங்கிய நிலையில் இருப்பதற்கான காரணம், தமிழ் தலைமைகள் இழைத்த தவறு என்ன, தமிழ் தலைமைகள் அடுத்து எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கை என்ன மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார்விடங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐ.பி.சி தமிழின் இன்றைய உண்மைகள் நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/16AROSWr6Dg

NO COMMENTS

Exit mobile version