Home ஏனையவை ஆன்மீகம் தீபத்திருநாளை கொண்டாட ஆயத்தமாகும் மலையக மக்கள்

தீபத்திருநாளை கொண்டாட ஆயத்தமாகும் மலையக மக்கள்

0

எதிர்வரும் 31ஆம் திகதி மலரவுள்ள தீபத்திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள்
ஆயத்தமாகி வருகின்றனர்.

இதனால் ஹட்டன் நகரம் உட்பட மலையக நகரங்களில் பெரும்
எண்ணிக்கையிலான பொது மக்கள் கூடியுள்ளதால் பல வீதிகளில் சன நெரிசல்
ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ஹட்டன் நகரம் உட்பட பல நகரங்களில் நடை பாதை வியாபார கடைகள்
ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

மக்கள் ஆடைகளையும் அத்தியாவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக நகரங்களை
நோக்கி வருகை தருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வெளி வர்த்தகர்கள்

ஹட்டன் நகரில் பொது மக்களின் வசதி கருதி அதிகமான பொலிஸார் மோப்ப நாய்களுடன்
பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசேட பேருந்து சேவைகளும்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அதிகமான மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ஹட்டன் நகரத்தினை நோக்கி வருகை
தருவதனால் வர்த்தக நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளன.

இதனால் பல இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு
பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹட்டன் நகரில் இந்த வருட தீபத்திருநாளினை முன்னிட்டு வெளி வர்த்தகர்களுக்காக
பல இடங்களில் கடைகள் போடப்பட்டுள்ளன.

விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

இவ்வருடம் அதிகமான கடைகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதால் நகர மற்றும் பிரதேச சபைகளுக்கு பெரும் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தினங்களில் மேலும் பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக
நகரங்களுக்கு வரக்கூடும் என்பதனால் பாதுகாப்பு பிரிவினரால் விசேட பாதுகாப்பு
ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

தீபத்திருநாளினை கொண்டாடுவதற்காக தலைநகரிலிருந்தும் புற நகரங்களிலிருந்தும்
வேலை நிமித்தம் சென்றவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு வருவதற்காக விசேட புகையிரதம்
மற்றும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறைசார்ந்த
அதிகாரிகள் கூறியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version