Home இலங்கை அரசியல் மலையகம் முட்டாள்களை அனுப்பியுள்ளது.. சபையில் அர்ச்சுனாவின் சவால்

மலையகம் முட்டாள்களை அனுப்பியுள்ளது.. சபையில் அர்ச்சுனாவின் சவால்

0

அரசாங்கம் அலையக மக்களுக்கு கொடுத்தது சம்பள உயர்வு அல்ல பிச்சை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார். 

நேற்றைய தினம் (15.11.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

சம்பள உயர்வு 

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “200 ரூபா கொடுக்கின்றீர்கள், இதிலும் 200 ரூபாய் என்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள், நீங்கள் கொடுத்திருப்பது பிச்சை. 

140 ரூபாய் ஒரு இறாத்தல் பாண், இந்நிலையில் இரண்டு வாழைப்பழங்களையும் பாணையும் வைத்து 10 பேர் உள்ள ஒரு குடும்பம் எப்படி சாப்பிட முடியும்? 

என்றோ ஒரு நாள் நான் மலையகம் வருவேன், மலையக அரசியல் செய்ய ஆசையில்லை. ஆனால் மலையகம் முட்டாள்களை அனுப்பியிருக்கின்றது. 

76 வருடங்களாக அந்த இனத்து மக்களுக்காக போராட யாருமில்லை” என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version