Home இலங்கை அரசியல் பேசுபொருளாகியுள்ள சஜித்தின் காலணி..

பேசுபொருளாகியுள்ள சஜித்தின் காலணி..

0

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் நடைபெற்ற நிகழ்வொன்றில் எதிர்க்கட்சித் தலைவர் அணிந்திருந்த காலணி இன்று பேசுபொருளாக்கப்பட்டுள்ளது.

சஜித்தின் காலணி

சட்டத்தரணி உபுல் ஜெயசூரியா எழுதிய “I was there” “ஐ வாஸ் தேர்” என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.இதில் முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க உட்பட பல்வேறு அரசியல்வாதிகளுடன் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழக்கமாக அணியும் செருப்புகளுக்குப் பதிலாக ஒரு காலணியை அணிந்திருந்தார் என்பது பலருக்கு விசித்திரமாக தோன்றியுள்ளது.

அவர் வழக்கமாக செருப்பே அணிவார் என அனைவரும் அறிந்ததாகும்.

இருப்பினும், அன்று மாலை தன்னை அழைத்த நபருக்கு மரியாதை செலுத்துவதற்காக தான் காலணி அணிந்திருப்பதாக உபுல் ஜெயசூரியவின் காதில் அவர் கிசுகிசுத்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.

 

NO COMMENTS

Exit mobile version