ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனிடம் (Masoud Pezeshkian) இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) தொலைபேசி அழைப்பு சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அழைப்பின் போது, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தொடர்பில் மசூத் பெஷேஷ்கியன், பிரதமர் மோடிக்கு விளக்கமளித்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனுடன், முன்னோக்கிச் செல்வதற்கான வழி, பதற்றத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் ஆகியவற்றின் உடனடி அவசியத்தை மோடி வலியுறுத்தியுள்ளார்.
அவசர அழைப்பு
அத்தோடு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவை மோடி வலியுறுத்தினார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய மூன்று அணுசக்தி தளங்களான ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகியவற்றின் மீது இன்று காலை அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டது.
ஈரானிய ஜனாதிபதி
இதனை தொடர்ந்து, மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையிலான போர்பதற்றம் அதிகரித்தது.
இந்த நிலையிலேயே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஈரானிய ஜனாதிபதி தொடர்பு கொண்டு சூழ்நிலை குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
