Home இலங்கை சமூகம் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

0

மன்னார் தீவு பகுதியில் எதிர்காலத்தில் மனிதர்கள் வசிப்பது கேள்விக் குள்ளாகப் போகிறது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கவலை  வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு இன்று அனுப்பிய விசேட கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

“ஆரோக்கியமான சுற்றுச் சூழலில் மனிதர்கள் வசிக்க முடியாத சூழ்நிலையில்
அபிவிருத்தி எதற்காக? இந்த உலகத்தில் இயற்கைக்கு அப்பால் மனிதர்களாலேயே யாவும்
மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது.

வாழ்வியல் இருப்பு

அது மனிதர்களுக்கு எதிராக மாறுமாக இருந்தால் அது பயனற்றது. இந்த யதார்த்தத்தை
புரிந்து கொள்ள வேண்டும்.

இயற்கை வளச் சுரண்டல் மனிதர்களின் வாழ்வியல் இருப்பை ஏற்புடையதாக்காது.

மன்னார் தீவு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது தரைத் தோற்றத்தை விட மிகவும்
தாழ்வானது. இயற்கை அனர்த்தத்தை தாங்கும் திறன் கொண்டதாக அதன் கட்டமைப்பு இல்லை
என துறை சார்ந்த ஆய்வியலாளர்களின் கருத்தாக உள்ளது.

அதனால்தான் மன்னாரில் மூன்று மாடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி
வழங்குவதில்லை.

எனவே தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு, (டைட்டானியம்) கரையோர மண்
அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டுமென பொது மக்களின்
சார்பில் சிவில் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version