Home உலகம் வெளிநாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய அமெரிக்கா அறிவித்துள்ள சன்மானம்

வெளிநாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய அமெரிக்கா அறிவித்துள்ள சன்மானம்

0

வெனிசுலா(Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக்(nicolas Maduro) கைது செய்ய அல்லது அவருக்கு தண்டனை வழங்க வழிவகுக்கும் தகவல்களை எவராது அளித்தால் 25 மில்லியன் டொலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்க(us) வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

2013 முதல் வெனிசுலாவை ஆட்சி செய்து வரும் வரும் மதுரோ, கொக்கைய்ன் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றங்கள் உள்ளிட்ட கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

போதைப்பொருள் கடத்தல் 

உயர் அதிகாரிகளைக் கொண்ட வெனிசுலா போதைப்பொருள் கடத்தல் அமைப்பான கார்டெல் ஒஃப் தி சன்ஸில் அவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்ததாக அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 2020 முதல் அமெரிக்காவில் குற்றச்சாட்டில் உள்ள 62 வயதான மதுரோவைக் கைது செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முயற்சியாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

குற்றப்பத்திரிகையின்படி,  பயங்கரவாத அமைப்பான கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகளுடன் (FARC) பல தொன் கொக்கைய்ன் ஏற்றுமதிகளை மதுரோ ஒருங்கிணைத்தார்.

 மூன்றாவது முறையாகவும் பதவியேற்பு

FARC-க்கு இராணுவ ஆயுதங்களை வழங்குமாறு மதுரோ அந்த கும்பலை வழிநடத்தியதாகவும், அந்தக் கும்பலின் ஆயுதப் பிரிவாகச் செயல்பட்ட ஒரு அங்கீகரிக்கப்படாத போராளிக் குழுவிற்குப் பயிற்சி அளிப்பதில் அதன் உதவியை நாடியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.   

 

அமெரிக்கா வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்வதற்கான வெகுமதியை அறிவித்துள்ளநிலையில் அவர் நேற்று (10) வெள்ளிக்கிழமை தனது மூன்றாவது ஆட்சிக்காலத்திற்கான பதவியேற்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version