Home உலகம் 2025 இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா…!

2025 இல் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் : முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா…!

0

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு (passport) கொண்ட நாடுகளின் பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டின் குடிமக்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டின் மூலம் எத்தனை சர்வதேச நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை வைத்து கடவுச்சீட்டுகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இது சாதாரண குடிமக்கள் சர்வேதேச அளவில் பயணம் செய்வதை எளிதாக்குகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் எனும் நிறுவனம் தற்போது 2025ஆம் ஆண்டில் உலக நாடுகளின் கடவுச்சீட்டுக்களின் மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதலிடம் பிடித்த சிங்கப்பூர்

இதில், முதல் இடத்தில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின்(singapore) கடவுச்சீட்டு பிடித்துள்ளது. அந்த கடவுச்சீட்டை கொண்டு சுமார் 195 உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் சிங்கப்பூரின் குடிமக்களால் பயணம் செய்யக்கூடிய சிறப்பை அது பெற்றுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யும் அளவிற்கு ஜப்பான்(japan) நாட்டு கடவுச்சீட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது.

அந்த பட்டியலின் முதல் 10 இடங்களில் அடுத்தடுத்து பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே இடம்பிடித்துள்ளன.

இலங்கைக்கு கிடைத்த இடம்

இலங்கை(sri lanka) 44 நாடுகளுக்கே விசா இன்றி பயணம் செய்யும் நிலையில் 96 ஆவது இடத்தில் உள்ளது.

வெறும் 26 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணம் செய்யும் அளவிற்கு அந்த பட்டியலின் கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் (afghanistan)நாட்டின் கடவுச்சீட்டு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version