Home இலங்கை அரசியல் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதுவர்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதுவர்

0

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (julie chung) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இருவருக்கும் இடையிலான குறித்த சந்திப்பு இன்று (02) வெளி விவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க தூதுவர் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை அவரது புதிய பதவியில் சந்திக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன்.

அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் 

அமெரிக்க இலங்கை கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு, வர்த்தகம், மனித உரிமைகளை உறுதி செய்தல் போன்ற பகிரப்பட்ட முன்னுரிமைகளில் இணைந்து செயற்படுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய ஐக்கியம், நீதி மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க ஆட்சி ஆகியவற்றில் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவுவது குறித்து அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.

இதேவேளை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இடையில் நேற்று (01) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version