Home முக்கியச் செய்திகள் இந்திய கடற்படைக்கு வரும் அமெரிக்காவின் ஆயுதங்கள்

இந்திய கடற்படைக்கு வரும் அமெரிக்காவின் ஆயுதங்கள்

0

இந்தியா (India) – அமெரிக்கா (United States) உறவில் ஆயுத பரிவர்த்தனையில் இரு நாடுகளும், தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியாவுக்கு நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் (Antony Blinken) இந்த விற்பனை ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளார். 

சீன ஆதிக்கம்

இந்த ஒப்பந்தத்தில் AN/SSQ-53G, AN/SSQ-62F மற்றும் AN/SSQ-36 ஆகிய நீர்மூழ்கி எதிர்ப்பு சோனோபாய் கருவிகள் இந்தியாவுக்கு விற்கப்பட உள்ளது.

இந்திய எல்லையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடற்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்தித்துள்ளதுடன் பாலஸ்தீன போர், விவகாரம் உள்ளிட்டவற்றைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version