அமெரிக்காவின் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இலங்கையை நோக்கி படையெடுக்கும் அதேவேளை அமெரிக்க படையினரின் பிரசன்னமும் இலங்கையை சுற்றி உள்ளது.
கடந்த ஒகஸ்ட் 05ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கை, மாலத்தீவு மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் இணைந்து நான்கு சுற்று படை ஒத்திகைகளை மேற்கொண்டிருந்தன.
இதன்போது, அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
அத்துடன், அமெரிக்காவின் நிதி உதவியில் இலங்கையில் கடற்படை கடலோர பாதுகாப்பு நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
இது சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் ஊடுருவல்களை தடுப்பதற்கான ஒரு நடவடிக்கை என கூறப்பட்டாலும் இலங்கையுடன் இணைந்து அதன் கடற்கரைகளில் கடற்படை கடலோர பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதே இதன் உள்நோக்கம் ஆகும்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,