Home முக்கியச் செய்திகள் அமெரிக்காவை சீண்டிய ஹவுதி: முகங்கொடுக்க நேர்ந்த பேரிழப்பு

அமெரிக்காவை சீண்டிய ஹவுதி: முகங்கொடுக்க நேர்ந்த பேரிழப்பு

0

யேமனில் உள்ள ஹவுதி இலக்குகளுக்குகளை குறிவைத்து அமெரிக்கா (US) தொடர்ச்சியான இரண்டாவது இரவு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹவுதிகளின் முக்கிய மூன்று இலக்குகளில் உள்ள ஏராளமான ஆயுத சேமிப்பு வசதிகளை குறிவைத்து போர் விமானங்கள் உதவியுடன் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் போர் 

குறித்த இலக்குகளில் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் உள்ள கப்பல்களை தாக்குவதற்கு ஹவுதிக்கள் பயன்படுத்தும் மேம்பட்ட பாரம்பரிய ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உலகின் பரபரப்பான நீர்வழிப்பாதைகளில் ஒன்றான செங்கடலில் பல மாதங்களாக அமெரிக்கா உட்பட முக்கிய நாடுகளின் கப்பல்களை குறிவைத்த ஈரான் ஆதரவு ஹவுதிகள் , ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு பதிலாக அந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அறிவித்திருந்தனர்.

ஈரானின் ஆதரவு 

ஹவுதி, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய அனைத்தும் அமைப்புக்களும் ஈரான் தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக செயற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பலஸ்தீனப் பகுதியில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தப் போவதில்லை என்று ஹவுதிக்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version