38 பேரின் உயிர்கள் பலியான அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், அதற்கான ஆரம்பக் கட்ட தடயங்கள் கிடைத்துள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மேலதிக தகவல்கள் எதனையும் குறிப்பிடவில்லை.
அதிகமான தடயங்கள்
எனினும், விபத்து தொடர்பான விசாரணைகளுக்கு அமெரிக்கா உதவும் என ஊடகவியலாளர்களிம் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பரவிய விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படங்களை விட அதிகமான தடயங்களை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நிபுணர்களின் சந்தேகம்
ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளின் விமானத்தின் ஜிபிஎஸ் சிஸ்டம் எலக்ட்ரானிக் ஜாமிங்கால் சேதமடைந்திருக்கலாம் என விமானப் போக்குவரத்து நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அஜர்பைஜான் ரஷ்யா மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை, ஆனால் அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ரஷாத் நபியேவ் கூறுகையில், விமானம் வெளிப்புற குறுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.