Home உலகம் கிறிஸ்மஸ் கேக் உட்கொண்ட மூவருக்கு நேர்ந்த கதி

கிறிஸ்மஸ் கேக் உட்கொண்ட மூவருக்கு நேர்ந்த கதி

0

பிரேஸிலில் (brazil) கேக் உட்கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக்கினை உட்கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குறித்த கேக்கில் ஆர்சனிக் எனப்படும் ஒரு இரசாயண பதார்த்தம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.   

சோதனை நடவடிக்கை

இந்த சம்பவத்தில் ஆரம்பத்தில் ஐவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் பிரேஸிலில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்களில் மூவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர்

மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் காலாவதியான பல உணவுப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version