Home முக்கியச் செய்திகள் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள்: சர்வதேச விசாரணை – அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள்: சர்வதேச விசாரணை – அமெரிக்காவிலிருந்து ஒலித்த குரல்

0

இலங்கையில் (Srilanka) காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக் கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார்.  

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைக்குழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன.   

செம்மணி மனித புதைகுழி

நாம் உண்மையில் இருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய தினம் (27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகளும் சில எலும்பு சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாவது நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய அகழ்வுப் பணிகளின்போது இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக பணிகள் நடைபெறும். பின்னர், சிறு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may like this

https://www.youtube.com/embed/Aufp2aaHtR8

NO COMMENTS

Exit mobile version