மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயார் கீழே விழுந்து மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம் (Jaffna) பகுதியைச் சேர்ந்த ஜீவராசா மேரிதெரேசா (வயது 52) என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 19ஆம் திகதி ஊர்காவற்துறையில் உள்ள தனது வீட்டினை பார்ப்பதற்கு
மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
இதன்போது ஊர்காவற்துறை
வைத்தியசாலைக்கு முன்பாக இடது பக்கமாக ஒருவர் துவிச்சக்கர வண்டியில்
வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென பிரேக்கினை அழுத்தியவேளை பின்னாலிருந்த குறித்த பெண்
திடீரென கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
பின்னர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார்
மேற்கொண்டார்.
You may like this
https://www.youtube.com/embed/ILJu89qwN8s
