Home இலங்கை அரசியல் மனித உரிமைகளை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கும் அமெரிக்கா

மனித உரிமைகளை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கும் அமெரிக்கா

0

Courtesy: Sivaa Mayuri

ஜனநாயக ஆட்சியை முன்னெடுத்துச் செல்லும் போது, மனித உரிமைகளை  உறுதிப்படுத்த, புதிய இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்கா (America) தெரிவித்துள்ளது.

இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, USAID பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர் மற்றும் அமெரிக்க திறைசேயின் பிரதி உதவி செயலாளர் றொபர்ட் கப்ரோத் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோர் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் குழு,  சிவில் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தபோது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூகப்பிரதிநிதிகள் அதிருப்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், இணைய பாதுகாப்பு போன்ற சட்டங்கள் குறித்து சிவில் சமூகப்பிரதிநிதிகள் இதன்போது  அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.

இந்தநிலையில், ஜனநாயக நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உரையாடல் முக்கியமானது என்பது தொடர்பில் புதிய அரசாங்கத்தை ஊக்குவிப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version