Home அமெரிக்கா ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள்

ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள்

0

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடி வைக்கும் கப்பல்கள்
மீது தங்களது படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கப் படைகள்
தெரிவித்துள்ளன.

இதை “தற்காப்பு” தாக்குதல் என்று அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர்
விவரித்துள்ளார்.

முன்னதாக, ஈரானின் தெற்கு துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் (Bandar Abbas)
வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆபிரகாம் உடன்படிக்கை

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான
சாத்தியமான ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகளைப் பற்றி விவாதிக்கும்,
தெஹ்ரானைச் சேர்ந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர்கள் கட்டாரில்
தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும்,
ஒப்பந்தம் “உடனடியாக” ஏற்படும் என்று இதற்குப் பொருளல்ல என ஈரானின் வெளியுறவு
அமைச்சக செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில்
சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியே உள்ளிட்ட பிராந்திய வல்லரசுகள்
உள்ளடக்கப்பட வேண்டும் என்றும், அவை இஸ்ரேலுடன் உறவுகளை சுமுகமாக்குவதற்கான
‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ (Abraham Accords) கையெழுத்திட வேண்டும் என்றும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Source: https://tamilwin.com/article/us-forces-attack-iran-missile-sites-1779790637

NO COMMENTS

Exit mobile version